Tuesday, 1 October 2019

அரசியல் பேச இது மேடையல்ல... விஜயை விமர்சித்தாரா சூர்யா...? வைரலாகும் வீடியோ


திரைப்பட விழாக்களில் விளம்பரங்களுக்காக நடிகர்கள் அரசியல் பேசுவது வாடிக்கையாகி வருகிறது. ஆனால் காப்பான் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் இந்த வழக்கத்திற்கு முற்றிலும் மாறுபட்டு நடிகர் சூர்யா பேசிய காணொளி இணையங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது.

சமீபத்தில் பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் அரசியல் பேசி பெரும் சர்ச்சைகள் கிளம்பி இருந்தது. இதற்கு முன்னதாகவே மெர்சல் உள்ளிட்ட பல திரைப்பட விழாக்களில் அரசியல் பேசி நடிகர் விஜய் சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்.

இந்நிலையில் கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற காப்பான் இசை வெளியீட்டு விழாவில், அரசியல் குறித்து பேச நிர்பந்திக்கப்பட்டும், 'அதை பற்றி பேச இது மேடையல்ல. எதையும் விளம்பரத்திற்காக நாம் பண்ண வேண்டாம். எதை எங்கு பேச வேண்டுமோ அதை அங்கு பேச வேண்டும்' என நடிகர் சூர்யா பேசி இருந்தார்.

அந்த காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கும் நிலையில், 'நடிகர் சூர்யா, விஜயை தான் குறிப்பிட்டு இப்படி பேசி இருப்பதாக' ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவிக்க துவங்கி இருக்கின்றனர்.

Disqus Comments
'