Sunday, 6 October 2019

தமிழ் சினிமாதான்..! ஆனால் தெலுங்கர்களுக்கே முன்னுரிமை..! சிவகார்த்திகேயனுக்கு நிகழ்ந்த கொடுமை


சிவகார்த்திகேயன் நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் 'ஹீரோ' என்கிற திரைப்படம் உருவாகி வந்தது பலர் அறிந்த தகவல். இப்பொழுது இத்திரைப்படத்தின் தலைப்பு குறித்து ஒரு மாபெரும் பஞ்சாயத்தே திரையுலகில் நடைபெற்று வருகிறது.

இசையமைப்பாளர் எஸ்.எஸ் குமரன் ஹீரோ என்கிற திரைப்பட தலைப்பை விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கத்திடம் முறையான அனுமதி பெற்று, அதனை சிவகார்த்திகேயனின் திரைப்படத்திற்கும் வழங்கி இருக்கிறார்.

இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா நடிக்கும் ஒரு திரைப்படதிற்கும் ஹீரோ என்கிற தலைப்பு சூட்டப்பட்டு இருக்கிறது. தெலுங்கு மட்டுமல்லாது தமிழ் மொழியிலும் இத்திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், நடிகர் விஷாலின் உதவியை நாடி இருக்கிறது இப்படக்குழு.

எஸ்.எஸ் குமரன் முன்னதாக பதிவு செய்திருந்தாலும், விஜய் தேவரகொண்டா படத்திற்கே தலைப்பு சொந்தம் என நடிகர் விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்கம் உத்தரவிட்டு விட, சிவகார்த்திகேயன் படக்குழு தற்பொழுது செய்வதறியாது தவித்து வருகிறது.

இந்த பஞ்சாயத்தின் காரணமாக, என்னதான் நானும் மதுர காரன்தான்டா என திரைப்படத்தில் வசனம் பேசினாலும், இனம் என்று வந்துவிட்டால் தெலுங்கர்களுக்கே அவர் முன்னுரிமை அளிப்பதாக ஒரு குற்றச்சாட்டு விஷால் மேல் பரவலாக சாட்டப்பட்டு வருகிறது.


Disqus Comments
'