Friday, 4 October 2019

ஆன்லைன் தள்ளுபடி தில்லுமுல்லுகள்...! 50 வருடத்திற்கு முன்பே சொன்ன சிவாஜி..! சிந்திக்க வைக்கும் வீடியோ


இந்தியாவிலும் தற்பொழுது ஆன்லைன் விற்பனை செய்யும் நிறுவனங்கள் காலூன்றி விட்டன. இந்நிலையில் ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆன்லைன் சந்தைக்குள் இழுக்க வேண்டும் என்கிற நோக்கில் தள்ளுபடி என்கிற ஆயுதத்தை இந்நிறுவனங்கள் அதிகம் உபயோகப்படுத்துகின்றன.

ஒரு சில நேரங்களில் இந்த தள்ளுபடிகள் நியாயமாக நடைபெற்றாலும், பல சமயங்களில் விலையை ஏற்றி, அதனை பழைய விலைக்கே குறைத்து தள்ளுபடி என்கிற பெயரில் இந்நிறுவனங்கள் செய்யும் தகிடு தத்தங்களை கண்கூடாக காண முடிகிறது.

இந்த நிறுவனங்களின் இப்படிப்பட்ட வியாபார யுக்தியை 50 வருடங்களுக்கு முன்னதாகவே வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார் நடிகர் சிவாஜி. இது குறித்த திரைப்பட காட்சியில், தீபாவளி விற்பனையாக விலையில் 50% தள்ளுபடி என விளம்பரம் செய்து விட்டு,

விலையை ஏற்றி காட்டி தள்ளுபடி என்ற பெயரில் அதே பழைய விலையில் விற்றாலும், குறைந்த விலைக்கு பொருட்கள் கிடைப்பதாக எண்ணி மக்கள் அடித்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

பின்னர் முதலாளியிடம் இந்த சூட்சமத்தை சொல்லும் சிவாஜி, 'விற்கும் நாம் புத்திசாலி அல்ல வாங்கி செல்லும் இவர்கள்தான் முட்டாள்கள்' என இன்றைய மக்களின் மனநிலையை அன்றே படம் போட்டு காட்டி இருக்கிறார் சிவாஜி.  

Disqus Comments
'