Tuesday, 1 October 2019

மனசு வைத்த விஜய்... சாந்தனுவிற்கு அடித்த யோகம்... நிறைவேறும் ரசிகர்கள் ஆசை


நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் மாபெரும் அந்தஸ்து கொண்ட ஒரு நடிகர் எனும் நிலையை தனது கடின உழைப்பால் இன்று எட்டி இருக்கிறார்.

இப்படியொரு உச்சத்திற்கு வந்த பின்னர்,  நடித்தோமா சென்றோமோ என்று இருந்து விடாமல் இள நடிகர்கள் வளர்ச்சியிலும் உதவ துவங்கி இருக்கிறார் நடிகர் விஜய்.

அதாவது இவர் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் பிகில் திரைப்படத்தில், வளர்ந்து வரும் இளம் நடிகரான கதிர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க காரணமாக அமைந்தார்.  

மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கம் தனது அடுத்த படத்தில், இயக்குனர்  பாக்கியராஜ்  அவர்களின் மகனும், ஓரிரு படங்களில் நடித்தவருமான சாந்தனுவிற்கு வாய்ப்பளித்து இன்ப அதிர்ச்சி அளித்திருக்கிறார்.

சாந்தனு தமிழ் சினிமாவின் லெஜெண்டான பாக்யராஜ் அவர்களது மகனாக இருந்தாலும், தனக்கான திருப்புமுனை நோக்கி இன்றும் ஓடி கொண்டுதான் இருக்கிறார்.

இந்நிலையில் அவருக்கு விஜய் கொடுத்திருக்கும் இந்த வாய்ப்புதான் அந்த திருப்புமுனையாக இருக்கும் என பலரும் சாந்தனுவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சில வாரங்களுக்கு முன்பு தான் விஜய் குறித்து சாந்தனு வெளியிட்ட பதிவில் ரசிகர்கள் பலர், தளபதியும் நீங்களும் ஒரு படத்தில் அண்ணன்-தம்பியாக நடித்தால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் தற்பொழுது வெளியாகியுள்ள இந்த செய்தி ரசிகர்களின் விருப்பத்தை விஜய் நிறைவேற்றி வைத்ததை போலவும் அமைந்து விட்டது.  
Disqus Comments
'