Friday, 11 October 2019

சீரியல் முதல் சினிமா நடிகை வரை..! சில லட்சங்களில் கேட்டது கிடைக்கும்..! இச்சை தீர்க்கும் இசையமைப்பாளரின்


என்னதான் நடிகைகள் தங்களுக்கு நடக்கும் பாலியல் கொடுமைகள் பற்றி கதறிக்கொண்டு இருந்தாலும், எவையும் குறைந்த பாடில்லை. மாறாக அதிகரித்த வண்ணமே உள்ளது.

இதனை நிரூபிக்கும் விதத்திலேயே அமைந்திருக்கிறது, பிரபல செய்தி ஊடகம் வெளியிட்ட தகவல் ஒன்று. அதாவது சென்னையை சேர்ந்த பிரபல பப் ஒன்றில் இளம் பெண்கள், சினிமா நடிகைகள் சீரழிக்கப்படுவது குறித்த செய்தி தான் அது.

ஹேப்பி பில்ஸ் எனப்படும் போதை மாத்திரைகளுக்கு பெண்களை அடிமையாக வைத்து பாலியல் இச்சை முதல், பண தேவைகள் வரை அனைத்தையும் தீர்த்து கொள்கிறது கும்பல் ஒன்று.

'சும்மா ட்ரை பண்ணி பாருங்களேன் பிடிக்கலைன்னா வேண்டாம்' என நைசாக குறிப்பிட்ட போதை மாத்திரைகளை தாங்கள் குறிவைக்கும் பெண்களுக்கு வழங்குகிறது இக்கும்பல்.

அவர்கள் மறுத்தாலும் அவர்களுக்கு தெரியாமல், பானங்களில் கலந்து பருக வைத்து விடுகின்றனர். வயகரா வகை மாத்திரைகளை போல காம உணர்வுகளை தூண்டும் இந்த போதை மாத்திரைகள் வேலை செய்ய துவங்கியவுடன், உல்லாசம் அனுபவிக்கும் இவர்கள், மிரட்டி பணம் பறிக்கவும் துவங்குவார்களாம்.

இதன் பின்னணியில் பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஒருவர் இருப்பதாகவும், அவருக்கு நடிகை ஒருவரும், அரசியல் வாரிசு ஒருவரும் பெரிய அளவில் உதவி செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த கும்பல், பிரபல சீரியல் நடிகை மீது ஆசை கொண்ட, அரசியல் பிரமுகர் ஒருவருக்காக அவரை பப்புக்கு அழைத்து வந்து தங்களது வழக்கமான முறையில் சீரழைத்த தகவலையும் அந்த ஊடகம் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இவர் மட்டுமல்லாது பல சினிமா நடிகைகளும் இந்த கும்பலால் பாதிக்கப்பட்டு இருக்கும் தகவலும் வெளியாகி திரைத்துறையினரை தற்பொழுது அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.     
Disqus Comments
'