Friday, 11 October 2019

ஒரே ஒரு மாத்திரைதான்...! வாழ்க்கையே குளோஸ்..! சென்னை பப்புகளில் சீரழியும் இளம்பெண்கள்


சென்னையில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் இரவு மதுபான விடுதிகளில் எக்கச்சக்கமான பெண்கள் தங்களது வாழ்க்கையை துழைப்பது வாடிக்கையாகி வருகிறது.

திரைப்படங்களில் காட்டப்படுவது போல பெரிய பெரிய பண முதலைகள், தங்கள் இச்சைகளை தீர்த்து கொள்ளும் இடமாக விளங்கி வருகிறது இவ்வித பப்புகள்.

சினிமா பிரபலங்கள் முதல் கல்லூரி மாணவிகள் வரை எவரையும் விட்டுவைக்காத இந்த கும்பல், ஹேப்பி பில்ஸ் எனப்படும் ஒருவித போதை மாத்திரைக்கு பெண்களை அடிமைப்படுத்தி சீரழித்து வரும் கொடுமையை பிரபல செய்தி ஊடகம் ஒன்று வெளிச்சம் போட்டு காட்டியது.

வயகரா போன்று உறவு ஆசையை தூண்டும் இந்த ஹேப்பி பில்ஸ் எனப்படும் மாத்திரைகள், பப்புகளுக்கு வரும் பெண்களுக்கு அவர்களது அனுமதியுடனோ மறுக்கும் பட்சத்தில் தெரியாமலோ அவர்கள் அருந்தும் பானங்களில் இக்கும்பலை சேர்ந்தவர்கள் மூலம் கலக்கப்படுகிறது.

பின்னர் போதை தலைக்கேறிய நிலையில், அந்த பெண்களிடம் எல்லை மீறி உல்லாசம் அனுபவிக்கும்  அவர்கள், அந்த மாத்திரைகளுக்கு பெண்களை அடிமையாக்கி பணம் கறக்கவும் துவங்கி விடுகின்றனர்.

இப்படி ஆயிரகணக்கான பெண்கள் இந்த கும்பலுக்கு இரையாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர், அரசியல் வாரிசு ஒருவர் மற்றும் பிரபல நடிகை ஆகியோர் இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறது.

இத்தனை பேர் பாதிக்கப்பட்டும், அவமானத்திற்கு பயந்து ஒருவரும் புகார் அளிக்க முன்வரவில்லை. அப்படியே முன்வந்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் அரசியல் செல்வாக்கை வைத்து கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும் புகார்கள் குவிகிறது.

Disqus Comments
'