Wednesday, 2 October 2019

முகேனை காதலில் கவுக்க மீராமிதுன் போட்ட திட்டம்... வெளியான ஆடியோ ஆதாரம்


நடிகை மீரா மிதுன் மீது, பொய் பித்தலாட்டத்திற்கான ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் வெளியிடப்பட்டு இருந்தாலும் அவர் செய்கைகள் தொடர்ந்து சர்சைக்குரியனவாகவே இருந்து வருகிறது.

பிக்பாஸ் வாக்கெடுப்பில் பித்தலாட்டம், சேரன் மீது அபாண்ட பழிசுமத்தியது உட்பட, பிக்பாஸ் தொடர்பற்ற மேலும் பல மீரா மிதுனின் கோல்மால் வேலைகளின் ஆதாரங்கள் அண்மையில் வெளியாகி இருந்தது. 

இந்நிலையில் முகேனுக்கும் தனக்கும் ஜோடி பொருத்தம் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கூறுவது போல வீடியோக்களை வெளியிடுமாறு தனது நண்பர்களிடம் அவர் பேசும் ஆடியோ கால் தற்பொழுது வெளியாகியுள்ளது.

குறிப்பிட்ட போன் காலில், சமூக வலைத்தளங்களில் சீரியல் காட்சிகளில் காதல் பாடல்களை இணைத்து ரசிகர்கள் வீடியோ எடிட் செய்வது போல, நானும், முகேனும் பேசி கொள்ளும் காட்சிகளை அவர் பாடிய பாடலை வைத்து வீடியோ வெளியிடுங்கள் என மீரா பேசுகிறார்.

இந்த ஆடியோ ஆதாரம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவ துவங்கி இருப்பதை அடுத்து பிக்பாஸ் ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

,
Disqus Comments
'