Friday, 4 October 2019

ஒரு கையில் சரக்கு, மறு கையில் தம்மு...! குடிகாரர்களை மிஞ்சும் சிறுவர்கள்... அதிர்ச்சி வீடியோ


18 வயத்துக்குட்பட்டோருக்கு மது, புகையிலை பொருட்கள் விற்க கூடாது எனும் சட்டமே இருந்தாலும், தாங்கள் குடிப்பதுமட்டுமின்றி விவரம் அறியா பிஞ்சுகளை இந்த போதை பழக்கத்திற்கு ஆளாக்கும் கொடூரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சில நாட்களுக்கும் முன்னர் தமிழகத்தை சேர்ந்த சிறுவர்கள் சிலர், ஊற்றி கொடுக்க கொடுக்க தேர்ந்த குடிகாரர்களை போல மது அருந்தும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை கிளப்பி இருந்தது.

இந்த சம்பவம் நிகழ்ந்து ஓரிரு நாட்களே ஆன நிலையில் தற்பொழுது, வட மாநில சிறுவர்கள் சிலர் ஒருகையில் சரக்கு மறுகையில் தம்மு என புகைவிட்டு கொண்டே மது அருந்தும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

வீடியோவில் இருப்பவர்களின் விவரங்கள் ஏதும் தெரியாத நிலையில் இது போன்று சிறுவர்களை மது குடிக்க தூண்டுபவர்களை தண்டிக்க வேண்டும் என்கிற நோக்கில் சமூக ஆர்வலர்கள் பலர் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர். 

Disqus Comments
'