Friday, 4 October 2019

லவ்வோ லவ்வு..! கவினை வச்ச கண்ணு வாங்காமல் பார்த்த லொஸ்லியா... வைரலாகும் வீடியோ


கவின்-லொஸ்லியா இடையிலான காதல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டதுடன், விமர்சனங்களுக்கும் ஆளானது.

இந்நிலையில் நிகழ்ச்சியின் 95வது நாளில் 5 லட்ச ரூபாய் பணத்துடன் கவின் வெளியேற மனத்துடைந்து போனார் லொஸ்லியா. காதலனை பிரிந்த ஏக்கமும் அவ்வப்போது அவர் கண்ணில் தென்பட, தற்பொழுது மீண்டும் இணைந்திருக்கிறது காதல் ஜோடி.

இன்று வெளியான ப்ரோமோவில், தர்சன் மற்றும் கவின் பிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தினர்களாக நுழைகிறார்கள். இதனால் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் லொஸ்லியா, கவினை வச்ச கண்ணு வாங்காமல் பார்க்கும் தருணங்களும் அந்த காணொளியில் இடம்பெற்று இருக்கிறது.

கவினும் பிடித்த லொஸ்லியாவின் கையை விடாமல், பிற போட்டியாளர்களுடன் பேசுகிறார். இப்படி காதல் உணர்ச்சிகள் பொங்க இருவரும் நடந்து கொண்ட விதம், 'இன்றைய எபிசோடில் காதல் தூள் பறக்கும்' என ரசிகர்களை பேச வைத்துள்ளது.   

Disqus Comments
'