Sunday, 6 October 2019

'பிகில்' திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகாது...! செக் வைத்த அரசியல் கட்சிகள்


நடிகர் விஜய் படங்களும் ரிலீசுக்கு முன்பு அவை சந்திக்கும் பிரச்சனைகளும் இணைபிரியாதவை. இப்படி பிரச்சனைகளை சந்தித்து வெளியாவதினால் என்னமோ மாபெரும் வெற்றி அடைந்து வசூலையும் அள்ளி குவித்து விடுகின்றன.

இப்படியொரு பிரச்சனையை விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படமும் சந்திக்கும் நிலை உருவாகி இருக்கிறது. முன்னதாக பிகில் இசைவெளியீட்டு விழாவில் அரசியல்வாதிகளை விமர்சிக்கும் படி பேசி சர்ச்சையை கிளப்பி இருந்தார் விஜய்.

இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனை அடுத்து பல்வேறு விதமான நெருக்கடிகள் இப்படத்திற்கு அரசியல் கட்சிகளின் மூலம் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் தீபாவளி ரிலீஸை தடுக்க பல்வேறு முயற்சிகளையும் அரசியல் கட்சிகள் எடுத்து வருவதாக தெரிகிறது. அதாவது இன்றுவரை பிகில் திரைப்படம் தணிக்கை சான்றிதழ் பெற தணிக்கை குழுவிற்கு அனுப்படாமல் உள்ளது.

விதிமுறைகளின் படி நிர்ணயிக்கப்பட்ட ரிலீஸ் தேதியில் இருந்து 24 நாட்களுக்கு முன்னதாக தணிக்கை சான்றிதழ் பெற திரைப்படம் அனுப்பப்பட்டிருக்க வேண்டும்.

அந்த நாட்கணக்கை பிகில் தாண்டிவிட்ட நிலையில் இதை காரணம் காட்டி, இத்திரைப்படத்தின் தீபாவளி ரிலீஸை தடுக்கும் முயற்சியில் இறங்கி இருக்கின்றனவாம் நடிகர் விஜய்க்கு எதிரான அரசியல் கட்சிகள்.  


Disqus Comments
'