Friday, 4 October 2019

பொம்மை உற்பத்தி போல குழந்தை உற்பத்தி...! நைஜீரியாவில் களைகட்டும் தொழில்


பொம்மைகள் உற்பத்தி செய்வது போல குழந்தைகளை உற்பத்தி செய்து விற்று வந்த கும்பலால் நைஜீரியாவில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

நைஜீரியாவின் லாகோஸ் நகரில் வேலை வாங்கி தருவதாக கூறி பல பெண்கள் அழைத்து வரப்பட்டு அங்கிருந்த ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

என்றாலும் சொன்னபடி வேலை வாங்கி தராமல், அந்த பெண்களை தொடர்ந்து கற்பழித்து இருக்கிறது ஒரு கும்பல். அப்படி கற்பழிக்கும் பெண்கள் கருவுற்றால், 'அவர்கள் வயிற்றில் வளரும் குழந்தையை விற்று காசு தருவதாக' ஆசை வார்த்தைகள் கூறி, பிள்ளைகள் பெற்றெடுக்க வைப்பதை வழக்கமாக்கி இருக்கின்றனர். 

இப்படி அழைத்து வரும் அணைத்து பெண்களையும் கர்ப்பமாக்கி அவர்கள் ஈன்றெடுக்கும் குழந்தைகளை விற்று காசு பார்ப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறது இந்த கும்பல்.

ஒரு குழந்தையை 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை விற்று இவர்கள் லாபம் பார்த்து வந்த நிலையில், அங்கிருந்து தப்பிய பெண்கள் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.


மேலும் பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்ட இந்த் கும்பல், கருவுற்ற பெண்களுக்கு முறையான சிகிச்சை ஏதும் அளிக்காமல் பலரது இறப்புக்கு காரணமாக இருந்ததும் பெண்கள் அளித்த வாக்கு மூலத்தில் தெரியவந்தது.

இதனை அடுத்து அந்த கும்பலை சேர்ந்த சிலரை கைது செய்த போலீசார், இதுவரை 160க்கும் மேலான குழந்தைகளை மீட்டெடுத்து இருக்கின்றனர்.
Disqus Comments
'