Tuesday, 1 October 2019

அய்யயோ அண்ணாச்சியா..? தெறித்து ஓடும் தமிழ் நடிகைகள்...


சரவணா ஸ்டோர் நிறுவன உரிமையாளர்களில் ஒருவரான சரவணன் அருள், விளம்பரங்களில் நடித்திருந்ததை தொடர்ந்து தற்பொழுது திரைத்துறையில் நாயகனாக இருக்கிறார்.

சரவணா ஸ்டார் விளம்பரங்களில் அண்ணாச்சியை நடிக்க வைத்த பெருமைக்குரியவர்களான ஜே.டி மற்றும் ஜெரி ஆகியோர் இணைந்து சரவணன் அருள் அவர்களை நாயகனாகவும் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டு இருக்கின்றனர்.

சுமார் 30 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இவர்களது திரைப்படத்தை தானே தயாரித்து, நடிக்கவும் இருக்கிறார் சரவணன் அருள். இந்த திரைப்படத்தில் அண்ணாச்சிக்கு ஜோடியாக நடிகை நயன்தாராவை நடிக்க வைக்கும் முயற்சிகள் நடந்தது.

இது குறித்து நயன்தாராவை அணுக அவரோ, வாய்ப்பை தட்டி கழிக்கும் நோக்கில் தனது வழக்கமான சம்பளத்தை விட இருமடங்கு அதாவது 10 கோடி ரூபாய் கேட்டிருக்கிறார்.

'நயன்தாரா நடித்தால் சரி' என அந்த சம்பளத்துக்கும் அண்ணாச்சி தரப்பு ஓகே சொல்ல, 'நம்மை விட மாட்டார்கள் போலயே' என அரண்டு போனவர், காதலன் விக்னேஷ் சிவன் மூலம், 'தான் பிசியாக இருப்பதால் நடிக்க முடியாது' என தட்டி கழித்து இருக்கிறார்.

இதன் காரணமாக அவரை அடுத்து நடிகை தமன்னாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து அவரும் மறுத்து விட, வடமாநிலத்தில் இருந்து இளம் நடிகையை இறக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

Disqus Comments
'