Friday, 4 October 2019

'தல'தான் மாஸு...! தளபதி ரசிகர்கள் லூசு...! விஜய் ரசிகர்களை சூடாக்கிய வாண்டு


தல தளபதி ரசிகர்களிடையேயான பல ஆண்டுகால யுத்தம் நாம் அறிந்ததே. முதற்பார்வை முதல் முதல் நாள் வசூல் வரை தாங்கள் தான் பெரிது என அடித்துக்கொள்ளும் இவர்களது பழக்க வழக்கங்கள் அடுத்த தலைமுறை ரசிகர்களையும் விட்டு வைக்கவில்லை.

பெரும்பாலும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசும் இவர்களிடையே, சமீபத்தில் வாண்டு ஒன்று பேசிய காணொளிதான் தற்போது ட்ரெண்டிங். பிகில் படம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கும் பதில் அளிக்கும் இந்த சிறுவன்,

'பிகில் எல்லாம் வேஸ்டு. தளபதி ரசிகர்கள்  லூசு மாதிரி திரியாதீங்க.. தலதான் எப்போவுமே மாஸ்' என தளபதி ரசிகர்களை வெறுப்பேற்றும் விதத்தில் பேசி இருக்கிறார்.

இப்படி வாண்டுகள் கூட, அஜித் விஜய் என அடித்துக்கொள்ள துவங்கி இருப்பதை கண்ட சமூக ஆர்வலர்கள், எதிர்காலம் எப்படி இருக்க போகிறதோ என்று தலையில் அடித்து கொள்கின்றனர்.



 


Disqus Comments
'