Friday, 4 October 2019

என்னையே டம்மி ஆக்கிட்டாலே...! சக நடிகையால் புலம்பும் முன்னணி நடிகை


திரைத்துறையில் பெரிய பெரிய பிரபலங்கள் இணைந்து நடித்தால், வெளியே பெருமையாக சொல்லிக்கொண்டாலும், கண்டிப்பாக உட்பூசல்கள் இருந்து கொண்டே தான் இருக்கும்.

அதுவும் இரு நடிகைகள் இணைந்து நடிக்கிறார்கள் என்றால் சொல்லவே வேண்டாம், சீப்பு துவங்கி சீகைக்காய் வரை சிறு சிறு விஷயங்களும் வம்பில் வந்துதான் முடியும்.

அப்படி தமிழ் சினிமாவின் உச்ச நடிகை ஒருவர், பால் வண்ண நடிகையுடன் இணைந்து பிரமாண்ட படம் ஒன்றில் நடித்து இருந்தார். கதை, சம்பளம் விஷயங்களில் உச்ச நடிகைக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது.

என்றாலும், பால்வண்ண நடிகையின் நடிப்பே அரங்குகளில் ரசிகர்களின் கைதட்டல்களை அள்ளியது. விமர்சகர்களும் உச்ச நடிகை கதாபாத்திரம் சோபிக்கவில்லை என விமர்சனம் செய்ய, தன் படத்தில் தன்னையே மிஞ்சி விட்டதாக சக நடிகையின் மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறாராம் உச்ச நடிகை.


Disqus Comments
'