Thursday, 3 October 2019

கல்யாணம் வேண்டாம் ஆனா குழந்தை வேண்டும்...! இந்திய கலாச்சாரத்தை மறக்கும் நடிகைகள்


திரைத்துறையில் நாயக, நாயகிகள் பலர் மேற்கத்திய கலாச்சார முறையை பின்பற்றுவதையே விரும்புகின்றனர். அதற்கு அவர்கள் இந்தியாவில் பிறந்திருந்தாலும், மேலை நாடுகளில் பள்ளி கல்லூரி முடித்து முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இது ஒரு புறம் இருந்தாலும், இவர்களின் நடவடிக்கை கண் மூடித்தனமாக சினிமா பிரபலங்களை பின்பற்றும் ரசிகர்களையும் கெடுக்கும் விதமாகவே அமைந்து விடுகிறது.

உதாரணமாக, நடிகைகள் இலியானா, ஷ்ரேயா, ஸ்ருதி ஹாசன் ஆகியோரை எடுத்து கொள்ளலாம். இவர்கள் அனைவருமே இங்கிலாந்து, ரஸ்யா, அமெரிக்காவை சேர்ந்தவர்களை தங்களது காதலர்களாக தேர்ந்தெடுத்து இருந்தனர்.

இவர்களில் ஸ்ரேயா மட்டும் வெளிநாட்டு காதலரை மணந்து கொள்ள, இலியானா ஒருவருடத்துக்கும் மேலே திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தி காதலரை பிரிந்தார். சுருதி ஹாசன் இவர்களை போல எதையும் வெளிப்படையாக தெரிவிக்கமால் காதலரை பிரிந்தார்.

இவர்கள் ஒருபுறம் இருக்க, தமிழ் சினிமாவை சேர்ந்த வரலக்ஸ்மி போன்ற நடிகைகள் திருமணமே தேவையில்லை எனக்கூற, ஒரு சிலரோ திருமணம் வேண்டாம் ஆனால் குழந்தை வேண்டும் என்கிற அளவுக்கு மேற்கத்திய கலாச்சாரத்தில் ஊறி போய் இருக்கின்றனர்.

இவர்களின் இந்த நடவடிக்கைகள் அவர்களது விருப்பம் என்றாலும், தாங்கள் எதை செய்தாலும் அதையே ட்ரெண்ட் என நினைத்து திரும்ப செய்ய ஒரு கூட்டமே இருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டால் இந்திய கலாச்சாரம் பிழைக்கும். 
Disqus Comments
'