Saturday, 12 October 2019

எனக்கு இரண்டு குழந்தை இருக்கு..! நெருக்கம் காட்டி நடிக்கணுமா..? இயக்குனர்களை ஓட விடும் நடிகை


முன்னாள் முன்னணி நடிகையும் நடிப்பில் ஒட்டுமொத்த திரையுலகையும் கட்டி போட்டவர் இந்த நடிகை. திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டி என செட்டில் ஆனவர், பெரும் இடைவெளிக்கு பிறகு நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டும் நடித்து வருகிறார்.

என்றாலும் தற்பொழுதும் நாயகர்களுடன் ரொமான்ஸ் செய்து நெருக்கம் காட்டி நடிக்கும் கதாபாத்திரங்களுக்கும் இயக்குனர்கள் அவரை அணுகி வருகின்றனர்.

அப்படி முன்னணி நடிகர் ஒருவர் மூன்று வேடங்களில் நடித்த திரைப்படத்தில், ஒரு கதாபாத்திரத்தின் மனைவியாக கொஞ்சி குலாவும் வேடத்தில் இவரையே நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தது.

ஆனால் கதையை கேட்டு கடுப்பான நடிகை, எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது இனியும் என்னால் நாயகர்களுடன் நெருக்கமாக நடிக்கும் கதாபாத்திரங்களை ஏற்க முடியாது என ஒரே போடாக போட்டு விட்டாராம்.

இதனை அடுத்து அக்கடதேச நடிகை ஒருவர் அவரது கதாபாத்திரத்தில் நடித்து அதற்கு விருதுகளையும் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Disqus Comments
'