Thursday, 3 October 2019

'கதை' முக்கியம் அல்ல 'காசு' தான் முக்கியம்... முன்னணி நடிகரின் விபரீத முடிவு


வருடத்திற்கு 6,7 படங்களை அசால்டாக நடித்து திரையுலகினரை வியப்பில் ஆழ்த்தியவர் இந்த நடிகர்.

முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை எட்டிவிட்டாலும், தனக்கு தெரிந்தவர்கள் உதவியவர்கள் கதையுடன் வந்தால் கதையை கேட்காமலே நடித்து கொடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இதன் காரணமாக தொடர் தோல்விகள் வந்தாலும் எதை பற்றியும் கவலைப்படாமல் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தையும் பார்க்காது பல மொழி நடிகர்களின் படங்களில் நெகட்டிவ் வேடங்களிலும் நடித்து வருகிறார்.

நடிகரின் நடவடிக்கையை கண்டு வருந்தும் திரையுலகம், 'ஒழுங்காக கதை தேர்வு செய்தால் எங்கேயோ போய் இருப்பார். இப்படி பணத்திற்காக வரும் படத்தில் எல்லாம் நடித்து கொடுத்து கேரியரை கெடுத்து கொள்கிறாரே'என புலம்பி வருகிறதாம்.  
Disqus Comments
'