Friday, 13 September 2019

10-ம் வகுப்பு தேர்வில் இத்தனை முறை தோல்வியா..? உண்மையை சொன்ன யோகிபாபு


உலகில் ஒவ்வொருவருக்கும் கல்வி என்பது அவசியம், ஆனால் அத்யாவஸ்யம் அல்ல என்பதை பலர் நிரூபித்து காட்டி வாழும் சான்றாக இருந்து வருகின்றனர். அவர்களுள் நம் நடிகர் யோகிபாபுவும் ஒருவர் என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் இன்று இன்றியமையாத காமெடியனாக வலம்வருபவர் நடிகர் யோகிபாபு. விஜய், ரஜினி, அஜித் என முன்னணி நடிகர்களில் படங்களிலும், ஏன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடனேயே டூயட் போடும் அளவுக்கு விஷ்வரூபம் எடுத்து நிற்கிறார்.

இப்படி பட்ட ஒரு இடத்தை அடைந்திருக்கும் இவர், 10ம் வகுப்பில் பலமுறை தோல்வி அடைந்தவர் எனும் தகவல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசி இருந்த யோகிபாபு,

'எனக்கு படிப்பை விட விளையாட்டில் தான் கவனம் இருந்தது. அதனால் ஒழுங்காக படிக்கவில்லை. சேட்டைகள் செய்து அடிவாங்குவது வழக்கமானது. பத்தாம் வகுப்பு தேர்வை கூட 6,7 தடவைக்கு மேலே எழுதி இருக்கிறேன். 

என்னதான் விளையாட்டாக இதை நான் சொன்னாலும், உலகில் அனைவருக்கும் கல்வி அவசியம். படிக்க வேண்டிய காலத்தில் படிக்காமல் கோட்டை விட்டது குறித்து இன்றும் வருத்தப்படுகிறேன்' என தனது கல்வி அனுபவங்களை பகிர்ந்திருந்தார்.


Disqus Comments
'