Monday, 23 September 2019

தலைவிரித்து ஆடும் ஆபாசம்...! 'சன் டிவி' போல அந்த சேனல் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா..?


குழந்தைகள் பார்க்கிறார்கள் என்கிற சமூக பொறுப்பு கூட இல்லாமல், தனியார் டிவி சேனல்கள் ஆபாசம், இரட்டை அர்த்த வசனம் என TRP வெறி பிடித்து திரிகின்றனர்.

இது குறித்து பலரும் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்த நிலையில், அண்மையில் பிரபல 'சன் டிவி'க்கு 2.5 லட்சம் அபராதம் மற்றும் ஒரு வாரத்திற்க்கு மன்னிப்பு கோரி காட்சிகளை வெளியிட வேண்டும் என்கிற உத்தரவு பிறப்பித்தது 'பிசிசிசி' அமைப்பு.

இது ஒருபுறம் இருக்க சன் டிவியை விட பலமடங்கு ஆபாசம், இரட்டை அர்த்த வசனம், உருவ கேலி என மக்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் வெறுப்பை சம்பாரித்த, விஜய் டிவியின் மீதும் நடவடிக்கை எடுக்கபடுமா? என்கிற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.

மேலும் சன்டிவிக்கு நேர்ந்ததை பார்த்த பிறகும், இது போன்ற நிகழ்ச்சிகளை விஜய் நிறுவனம் ஒளிபரப்பினால் கண்டிப்பாக அவர்கள் மீதும் புகார் அளிக்கப்படும் எனவும் ஒரு சிலர் எச்சரிக்கை விடுத்தது வருகின்றனர்.

Disqus Comments
'