Monday, 23 September 2019

வம்பு இழுப்பதும்..! காலில் விழுந்து கதறுவதும் விஜய்க்கு வாடிக்கை தானே.. போட்டுத்தாக்கிய அரசியல் விமர்சகர்


நடிகர் விஜய் பிகில் திரைப்பட இசைவெளியீட்டு விழாவில் அரசியல்வாதிகளை சீண்டுவது போல பேசி இருந்தது, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதே சமயம் இது அரசியல்வாதிகள் மத்தியில் சலசலப்பையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் விஜயின் நடவடிக்கைகள் குறித்து டிவி நிகழ்ச்சியில் பேசிய அரசியல் விமர்சகர் ஒருவர், அரசியல்வாதிகளை வம்புக்கு இழுத்துதான் விஜய் கடந்த 5 வருடங்களாக தனது பிழைப்பை ஓட்டி வருகிறார்.

இப்படி அரசியல்வாதிகளை சீண்டும் விதமாக பேசுவதும், பிரச்சனை வந்த பின்னர் சம்பந்தப்பட்டவர்களின் காலில் விழுந்து கதறுவதும் அவருக்கு வாடிக்கையான ஒன்று தானே என மோசகமாக விமர்சித்து இருந்தார்.

அவர் கூறியதை போல, 'தலைவா' பட ரிலீஸின் போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடமும், சர்கார் ரிலீஸின் போது எடப்பாடியிடமும் விஜய் மன்னிப்பு கோரி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Disqus Comments
'