Saturday, 21 September 2019

ரசிக பாசம் எல்லாம் வெறும் வேஷம்..? காரியம் முடிந்ததும் வெளிநாடு பறந்த விஜய்


அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்பட இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜயின் பேச்சு ரசிகர்கள் சில்லறையை சிதற விடும் அளவிற்கு, அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் விதத்தில் இருந்தது.

வேலை செய்யும் ஒருவனை மேடையில் ஏற்றி அழகு பார்க்கும் ஒரே முதலாளி ரசிகர்கள், என் பேனரை கிழியுங்கள் ரசிகர்களின் மீது கைவைக்காதீர்கள் என அவர் நிகழ்ச்சியில் பேசி கொண்டிருக்க,

அதே சமயம் அரங்கத்தின் வெளியே, தீவிர விஜய் ரசிகர்கள், பெண்கள் என அடிவாங்கி கொண்டிருந்தனர். '10000 பேர் அமரும் அரங்கத்திற்கு 20000 பேர் வந்தால், விஜய் என்ன செய்யமுடியும்' என்பது நியாயமான ஒரு பதிலாக இருந்தாலும்,

சில குளறுபடிகளால் தனக்காக அடிவாங்கிய ரசிகர்களுக்காக ஆறுதலாக ஒரு அறிக்கையானது விட்டிருக்கலாம். ஆனால் இப்படி எதுவுமே நடக்காத மாதிரி தனக்கு கிடைத்த விடுமுறையை கொண்டாடும் விதத்தில் வெளிநாடு பறந்து விட்டார் விஜய்.

இதனை கண்டு பலரும், 'சில்லறைகளை சிதறவிட்ட விஜய் ரசிகர்களே அவர் பேசியது அவரது, திரைப்பட ப்ரோமோஷனுக்கு தான்' என ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்.  
Disqus Comments
'