Tuesday, 10 September 2019

அடுத்த சூப்பர் ஸ்டார் நிச்சயம் நீங்கதான்.!!! தளபதியை கொண்டாடும் திரையுலகம்


நடிகர் விஜயின் செயல்பாடுகளை திரையுலக தொழிலாளர்கள் மற்றும் அதன் தலைவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் திரைப்படங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஃபெப்சி எனும் அமைப்பின் கீழ் சங்கமாக செய்யப்பட்டு வருகின்றனர். சினிமாவை நம்பி இருக்கும் இவர்களுக்கு சோறு போடுவது நீண்ட நாட்கள் நடைபெறும் விஜய், அஜித், ரஜினி போன்ற பெரிய படங்கள் தான்.

ஆனால் முழு படத்தையும் தமிழகத்திலேயே எடுக்க முடியாத சூழ்நிலை நிலவும் போது, படக்குழு பிற மாநிலங்களுக்கு சென்று படப்பிடிப்பை நடத்துகின்றன. இதனால் இந்த திரையுலக தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு குறைகிறது.

இதன் காரணமாக பெரும்பாலான காட்சிகளை தமிழகத்தில் எடுக்க கோரி இந்த தொழிலாளர்கள் திரையுலகிற்கு வேண்டுகோள் விடுக்கின்றனர். என்றாலும் அஜித் போன்ற ஒரு சில நடிகர்கள்,

 ரசிகர்களின் இடையூறுகளை காரணம் காட்டி, தமிழக சூழலில் உருவான விஸ்வாசம் திரைப்படத்தை கூட, ஆந்திராவின் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடத்த கோரி வலியுறுத்தி வருகின்றனர். 

என்றாலும் நடிகர் விஜயோ, படத்திற்கு தேவையான காட்சிகள் வெளிநாடுகள், மாநிலங்களில்  அமையவேண்டிய கட்டாயம் இருந்தாலும், தொழிலாளர்கள் நலன் கருதி கூடுமானவரை தமிழகத்திலேயே படப்பிடிப்புகளை நடத்த வலியுறுத்தி வருகிறாராம்.


பிகில் திரைப்படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்புகளை பெரும்பாலும் வெளிநாட்டில் நடத்த தயாரிப்பு நிறுவனம் திட்டம் போட்டிருக்க, நடிகர் விஜயோ அவற்றை முடிந்தவரை தமிழ் நாட்டில் நடத்த பரிந்துரை செய்து இருக்கிறார்.

விஜயின் இந்த நடவடிக்கை குறித்து அறிந்த திரையுலக ஊழியர்கள் 'தளபதி தளபதிதான்' என பாராட்டி வருகின்றனர்.   
Disqus Comments
'