Wednesday, 25 September 2019

மனுஷன் ஜாதகம் அப்படி..! இனிதான் விஜய் உஷாரா இருக்கணும்... பரபரப்பை கிளப்பும் ஜோதிடர்


நடிகர் விஜயின் திரைப்படங்களும் அவை சந்திக்கும் அரசியல் பிரச்சனைகளையும் பல ஆண்டுகளாக நாம் கண் கூடாக பார்த்து வருகிறோம். இந்நிலையில் இந்த பிரச்சனைகளுக்கு என்ன காரணம் என கூறி பரபரப்பை கிளப்பி இருக்கிறார் ஜோதிடர் ஒருவர்.

என்னதான், அறிவியல் வளர்ந்தாலும் திரைத்துறையினருக்கு ஜோசியம், ஜாதகம் போன்றவற்றில் அதீத நம்பிக்கை உண்டு. இந்நிலையில் விஜயின் ஜாதகம், எதிர்காலம் குறித்து அண்மையில் விஜயின் நட்பு வட்டாரங்கள் ஜோதிடரிடம் கேட்டறிந்த தகவல் தற்பொழுது வெளிவந்துள்ளது.

அதன் படி, 'விஜயின் ஜாதகத்தை பார்த்து கணித்த திரையுலகினரின் பிரபல ஜோதிடர் ஒருவர், அவர் தமிழகத்தின் முதலமைச்சரே ஆகி படங்களில் நடித்தாலும்,

அந்த படங்களுக்கும் பிரச்சனை வரும். அவரது ஜாதகம் அப்படி. என்றாலும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்தால் வரும் பிரச்சனைகளே அவரை உயர்த்திவிட்டு விடும்' என தெரிவித்ததாக திரையுலகில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.


Disqus Comments
'