Thursday, 26 September 2019

விஜயை நம்பி காசு போட்டா நடுத்தெருவுல தான் நிக்கணும்...! திட்டி தீர்க்கும் தயாரிப்பாளர்


நடிகர் விஜயின் திரைப்படங்களும் அரசியல் பேச்சுக்களும், அவரை வைத்து தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு ஒரு மினி ஹார்ட் அட்டாக்கையே கொடுத்து விடும்.

திரைப்பட விழாக்களில் அவர் போக்கில் அரசியல்வாதிகளை விமர்சித்து விட, பட ரிலீஸின் போது தியேட்டர் முன்பு நின்று ரகளை செய்து விடுகின்றனர் குறிப்பிட்ட கட்சியின் தொண்டர்கள்.

இந்த நிகழ்வுகள், தலைவா, மெர்சல், சர்கார் என அவர் நடித்த படங்களில் நிகழ்ந்தேறியதும் நினைவிருக்கலாம். இதனால் விஜய்க்கு பிரபலமும் அரசியல் ரீதியாக நல்ல இமேஜும் மக்கள் மத்தியில் கிடைத்தாலும், படாத பாடு பட்டவர்கள் தயாரிப்பாளர்கள்தான்.

இந்நிலையில் விஜயின் இந்த நடவடிக்கைகள் குறித்து புலம்பிய பிரபல தயாரிப்பாளர் ஒருவர், 'விஜய் ஒரு சுயநலவாதி. கோடி கோடியாய் பணம் போட்டு, தன்னை நம்பி படம் எடுக்கும் தயாரிப்பாளர்களை பாதிக்கும் என அறிந்தும், பட விழாக்களில் இவ்வாறு அவர் பேசுகிறார்.


இவ்வாறு, தனது உறவினர் பிரிட்டோ இயக்கும் படத்தில் பேசுகிறாரா என்று பார்ப்போம். பிற தயாரிப்பாளர்கள் என்றால் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்தும் அவர், கிட்டத்தட்ட சொந்த தயாரிப்பு எனும் நிலையில், தமிழ் நாட்டில் படப்பிடிப்பு நடத்த கூறி இருக்கிறார்' என சகட்டு மேனிக்கு விமர்சித்து தள்ளி இருக்கிறார்.

தயாரிப்பாளரின் இந்த சர்ச்சை பேச்சு தான், கோலிவுட் வட்டாரத்தில் இப்பொழுது மிகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.   
Disqus Comments
'