Wednesday, 4 September 2019

உன் மனைவியை ஒழுங்கா அனுப்பி வை...! இல்லனா சாவடிச்சிருவேன்...! டிக்டாக் மோகத்தால் நிகழ்ந்த விபரீதம்


டிக்டாக் மோகத்தினால் பல பெண்கள் கவர்ச்சியில் எல்லை மீறுவதும் அதனால் பாலியல் சீண்டல்களை அனுபவிப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

இப்படியொரு சூழ்நிலையில் டிக்டாக் தோழிக்கு பாலியல் தொல்லையும், தட்டிகேட்ட கணவருக்கு கொலைமிரட்டலும் விடுத்த வாலிபர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். 

க்ரிஷ்ணகிரியை சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர் டிக்டாக் செயலியில் தொடர்ந்து தனது வீடியோக்களை பதிவிட்டு வந்திருக்கிறார். இந்நிலையில் அப்பெண்ணுக்கு குறிப்பிட்ட செயலியில் நண்பரான, 32 வயதான மோகன் குமார் என்பவர் தொடர்ந்து பாலியல் ரீதியாக பேசி தொல்லை செய்திருக்கிறார்.

இது குறித்து தனது கணவரிடம் அப்பெண் தெரிவிக்க, அவரும் மோகன்குமாரை கண்டித்திருக்கிறார். என்றாலும் அசராத மோகன் குமார், ஒரு படி மேலே போய், 'அவரிடமே மனைவியை அனுப்பி வைக்குமாறும்' தவறினால் 'இருவரையும் கொலைசெய்து விடுவேன்' என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.  

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் கணவர், க்ரிஷ்ணகிரி டவுன் போலீசாரிடம் புகார் அளிக்க, மோகன் குமாரின் இருப்பிடத்தை விரைந்து கண்டறிந்து கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றனர்.

















Disqus Comments
'