Tuesday, 3 September 2019

உலக அளவில் தளபதிதான் நம்பர் ஒன்..! வெறித்தனம் படைத்த மெகா சாதனை


நடிகர் விஜய்க்கு இருக்கும் ரசிகர் பட்டாளத்திற்கு அவரது திரைப்படம் குறித்த சிறிய அறிவிப்புகளும் உலக அளவில் டிரெண்ட் ஆகி விடுகிறது.

இப்படி மெர்சல், சர்கார் என வெளியான இவரது ஒவ்வொரு படங்களும் உலக அளவில் சாதனைகளை படைத்திருந்த நிலையில், அட்லீ இயக்கத்தில் உருவாகி இருக்கும் பிகில் திரைப்படமும் புதிய சாதனையை படைத்தது இருக்கிறது.

அதாவது இத்திரைப்படத்தின் வெறித்தனம் எனும் பாடல் அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியானது. A.R.ரஹ்மான் இசையில், தளபதி விஜயின் குரலில் உருவாகி இருந்த இப்பாடல் வெளியான 41மணி நேரத்தில் இதுவரை 8,50,000 லைக்குகளை அள்ளி இருக்கிறது.

இந்த எண்ணிக்கையானது உலக அளவில் வெளியான எந்த ஒரு பாடலை விடவும் அதிகம் எனும் நிலையில், குறைந்த நேரத்தில் அதிகம் லைக்குகளை பெற்ற பாடல் எனும் சாதனையையும் நடிகர் விஜயின் வெறித்தனம் படைத்து இருக்கிறது.   
Disqus Comments
'