Tuesday, 10 September 2019

காம இச்சைக்கு மாணவிகளை விருந்தாக கேட்கும் ஆசிரியர்கள்..! ஒரே வாரத்தில் மட்டும் 5 பேர் கைது...


மாதா,பிதா,குரு,தெய்வம் என தெய்வத்தையும் தாண்டிய மதிப்புமிக்க ஒன்றாக இருந்து வருவது ஆசிரிய சேவை. இத்தகைய பெருமை மிக்க பணியின் புனித தன்மையை கொச்சை படுத்தும் விதமாகவே நிகழ்ந்தேறி வருகின்றன சமூகத்தில் விரும்பத்தகாத ஒரு சில நிகழ்வுகள்.

ஆம் இந்த வாரத்தில் மட்டும் பள்ளி மாணவிகளிடம் எல்லை மீறிய விவகாரங்களில் 5க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். கல்வி கற்க வந்த இடத்தில் மாணவிகளுக்கு காமம் கற்று கொடுத்து கையும் கள்வுமாக சிக்கிய சம்பவங்கள் சில,

செப்டம்பர் 9: தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளிடம், எல்லை மீறியதுடன் 'வீட்டில் சொன்னால் டிசி தந்து அனுப்பிவிடுவேன்' என்றி மிரட்டிய தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

செப்டம்பர் 8: ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளியில், 4ம் வகுப்பு மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து அவரின் வகுப்பு ஆசிரியரும், துணை தலைமை ஆசிரியரும் மாறி மாறி கற்பழித்த குற்றத்திற்காக கம்பி எண்ணி கொண்டிருக்கின்றனர்.

செப்டம்பர் 8: திருக்கோவிலூர் பகுதியில் வீட்டிற்கு அழைத்து எல்லை மீறியதுடன், பள்ளி கழிப்பறையிலேயே 5ம் வகுப்பு மாணவிக்கு முத்தம் கொடுத்த இடைநிலை ஆசிரியர் ரங்கராஜன் கைது செய்யப்பட்டார். 

செப்டம்பர் 6: நீச்சல் கற்க வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவாவை சேர்ந்த பயிற்சியாளர் சுராஜித் சிங், வீடியோ ஆதாரம் வெளியான நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இப்படி மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகளில் இருந்து  பாதுகாப்பது எப்படி என்று சொல்லிக்கொடுக்க வேண்டிய ஆசிரியர்களே, தங்களது பாலியல் இச்சையை மாணவிகளிடம் தீர்த்து கொள்ளும் சம்பவங்கள் இந்தியா முழுவதும் அதிர்வலைளை ஏற்படுத்தி இருக்கிறது. 
Disqus Comments
'