Saturday, 14 September 2019

'30' பெண்களிடம் எல்லை மீறிய சிறுவன்.. '16' வயதில் ஒரு மைனர் குஞ்சு..!


திருச்சி துறையூர் அருகே அமைந்துள்ளது மருதை கிராமம் இப்பகுதியில் வசித்து வரும் பெண்கள் ஒரு 16 வயது சிறுவனை கண்டு அலறும் அவல நிலை நிலவி வருகிறது.

இப்பகுதியில் 5ம் வகுப்பு வரை கொண்ட 30 மாணவர்களை உடைய ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பணிபுரிந்து வருகிறார் 26 வயதான இளம்பெண் ஒருவர்.

வெளியூரை சேர்ந்தவரான இவர், துறையூரில் தங்கி செம்புளிச்சான்பட்டி வரை பேருந்தில் வந்து அங்கிருந்து 2 கிலோமீட்டர்கள் நடந்து பள்ளிவருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த 9ம் தேதி பள்ளி முடிந்து பேருந்தை பிடிக்க, மாலை வழக்கம் போல வீடுகள் இல்லா காட்டுப்பகுதி வழியே நடந்து சென்றுருக்கிறார். அவரது வருகையை எதிர்பார்த்து காத்திருந்த 16 வயது சிறுவன் வலுக்கட்டாயமாக அவரை கற்பழிக்க முயன்றதாக தெரிகிறது.

சிறுவனிடம் போராடி, வீடுகள் இருக்கும் கிராமப்பகுதி ஓடிய ஆசிரியை , அப்பகுதி மக்களிடையே உதவி கேட்க, அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின்பு அந்த சிறுவன்  மீது ஆசிரியை புகாரும் அளித்தார்.

ஆனால் சுமார் 4 தினங்களுக்கு மேலே ஆகியும் சிறுவனின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். மேலும் காலத்துறையினர் சிறுவனின் பெற்றோரிடம் பணம் பெற்றுக்கொண்டு ஆசிரியையை சமாதானப்படுத்தவே முயற்சிப்பதாகவும் அப்பகுதி மக்கள் குமுறுகிறார்கள்.

ஆசிரியை மட்டும் இன்றி இதுவரை 30க்கும் மேற்பட்ட பெண்களிடம் அவனும், அவனது சகோதரனும் எல்லை மீறி இருப்பதாகவும்,  இதனால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க கூறியும் அப்பகுதியை சேர்ந்த 30 ஆண்கள் புகார் அளித்திருக்கும் கொடுமையும் அங்கு நிகழ்ந்தேறி இருக்கிறது. 
Disqus Comments
'