Saturday, 21 September 2019

எல்லை மீறிய ஆபாசம்...! பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு '2.5 லட்சம்' அபராதம்


தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்கள் நிகழ்ச்சிகளில் ஆபாசம் தலைவிரித்து ஆடுவது வழக்கமான ஒன்றாகி இருக்கிறது. குழந்தைகள் பார்க்கும் நிகழ்ச்சிகளில் கூட அரைகுறை ஆடை, இரட்டை அர்த்த பேச்சு என எல்லை மீறுகின்றன பல தொலைக்காட்சிகள்.

இந்நிலையில் எல்லை மீறிய ஆபாசம் காரணமாக பிரபல சன் தொலைகாட்சிக்கு 2.5 லட்சம் அபராதம் விதித்து இருக்கிறது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மீதான புகாரை விசாரிக்கும், 'பிசிசிசி(BCCC)' சபை.


திருக்குமரன் இயக்கத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் கல்யாண வீடு. இதன் ஒரு எபிசோடில் தங்கையே தனது சகோதரியை எப்படி கற்பழிக்க வேண்டும் என ரௌடிகளிடம் விவரிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருந்தது.

மேலும் கற்பழிக்க முயன்றவர்களின் ஆணுறுப்பை நெருப்பிட்டு தண்டனை வழங்குவது போன்ற ஆபாசம் மற்றும், வன்முறை நிறைந்த காட்சிகளும் தொடர்நது ஒளிபரப்பாக அத்தொடருக்கு எதிர்ப்புகள் கிளம்பியது.

இந்நிலையில் பார்வையாளர்கள் அளித்த புகாரின் பெயரில், தொடரில் இடம் பெற்ற காட்சிகளை உறுதி செய்ததுடன், தண்டனையாக 2.5 லட்சம் அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டது.  
Disqus Comments
'