Wednesday, 11 September 2019

திரும்ப வந்துட்டேனு சொல்லு..! கட்டுடல் காட்ட தயாராகும் ''ஊதா கலரு ரிப்பன்''


ஊதா கலரு ரிப்பன் பாடலில், இளசுகளின் நெஞ்சை ரிப்பனாய் பறக்க விட்டவர் நடிகை ஸ்ரீ திவ்யா. அதன் பிறகு அவர் நடித்த படங்கள் சொல்லி கொள்ளும் அளவிற்கு வெற்றியை கொடுக்க தவறவே, திரைத்துறையும் மறந்து போனது.

சிவ கார்த்திகேயன் போன்ற நட்பு நடிகர்களும் கைவிட்டு விட படவாய்ப்புகள் இன்றி சில காலங்கள் காணாமல் போனார். இந்நிலையில் விஜய் ஆண்டனியுடன் திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கும் ஸ்ரீ திவ்யா , தனது கம்பேக், 'ஊதா கலரு ரிப்பனையும் மிஞ்சவேண்டும்' என்பதற்காக தீவிர உடற் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.


மேலும் தனது இரண்டாவது இன்னிங்சில் கவர்ச்சியிலும் கவனம் செலுத்த இருக்கும் 'ஸ்ரீ திவ்யா' வருகிற படங்களில், தனது கட்டுடலை காட்டி கவர்ச்சி விருந்தளிக்க இருப்பதாகவும் திரைத்துறையில் பேசப்பட்டு வருகிறது.


Disqus Comments
'