Saturday, 28 September 2019

மாஸாக திரும்பி வந்த சிவகார்த்திகேயன்...! கதறும் போட்டி நடிகர்கள்


வேலைக்காரன், சீம ராஜா, மிஸ்டர் லோக்கல் என அடுத்தடுத்து பிளாப் படங்கள் கொடுத்து மார்க்கெட்டில் சரிவை சந்தித்தார் நடிகர் சிவகார்த்திகேயன். இது பல போட்டி நடிகர்களுக்கும் பேரின்பத்தை தந்தது.

என்னதான் கஷ்டப்பட்டு உழைத்து சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை நாயகனாக அவதாரம் எடுத்துவிட்டால், 'நம்மை நேர்காணல் எடுத்த ஒருவன் நமக்கு போட்டியா?' என பல முன்னணி நடிகர்களுக்கும் சிவகார்த்திகேயன் மீது பொறாமை இருந்து வந்தது.

ஏன் தற்பொழுது பல சிறிய பட்ஜெட் வெற்றிப்படங்களை கொடுத்து மக்கள் மனதை கவர்ந்த நடிகர் கூட வெளிப்படையாக சிவகார்த்திகேயனை மட்டம் தட்டி பேசி இருந்தார்.

இந்நிலையில் அவர் தொடர் தோல்வி கொடுத்து வந்ததை கண்டு, இனிமேல் சிவகார்த்திகேயன் அவ்வளவுதான் என மகிழ்ச்சியில் ஆட்டம் போட்ட நடிகர்கள் பலர், 'எங்க வீட்டு பிள்ளை' எனும் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படைத்தை கொடுத்தினால், மீண்டும் பழைய படி புலம்ப துவங்கி இருக்கின்றனராம்.


Disqus Comments
'