Wednesday, 4 September 2019

மீண்டும் குண்டான சிம்பு..! அப்போ மறுபடியும் பேங்காக் போகணுமே..?? சீண்டும் நெட்டிசன்கள்


நடிகர் சிம்பு சில காலம் சர்ச்சைகளில் இருந்து விலகி இருந்தாலும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக பழையபடி ஷூட்டிங்குகளை புறக்கணித்து பழைய சிம்புவாக அவதாரம் எடுத்து இருக்கிறார்.

இது குறித்த கேலி கிண்டல்களே சமூக வலைத்தளங்களில் அடங்காத நிலையில், சமீபத்தில் வெளியான அவரது புகைப்படமும் நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது.

முன்னதாக உடல் எடை கூடி ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய சிம்பு, மாநாடு படத்திற்காக பேங்காக் வரை சென்று உடற்பயிற்சி செய்து சற்று ஸ்லிம் ஆனார்.

தற்பொழுது அப்படமும் கைவிடப்பட்ட சர்ச்சைகள் போய் கொண்டிருக்கும் நிலையில், ரசிகர் ஒருவருடன் சிம்பு எடுத்துக்கொண்ட புகைப்படம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.


ஏனென்றால் அந்த புகைப்படத்தில் பேங்காக் சென்று குறைந்த உடல் எடை மீண்டும் கூடி, பழைய குண்டு சிம்புவாக காட்சியளிக்கிறார். இதற்கு கருத்து தெரிவித்து வரும் நெட்டிசன்கள் பலர் அடுத்த படத்துக்கு முன் அப்போ கண்டிப்பா சிம்பு பேங்காக் போவார் என கிண்டல் செய்து வருகின்றனர்.

Disqus Comments
'