Wednesday, 4 September 2019

என் உடம்பு; நான் எப்படி வேணாலும் வீடியோ போடுவேன்..! குளியல் வீடியோ விமர்சனத்திற்கு ஷாலு சம்மு பதிலடி


வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷாலு சம்மு. இவர் தனது கவர்ச்சி வீடியோ குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு அதிரடியாக பதிலளித்து இருக்கிறார்.

கவர்ச்சி வீடியோ, கவர்ச்சி புகைப்படங்கள் என தனக்கு திரைப்படங்கள் கொடுத்த பிரபலத்தை விட பல மடங்கு பிரபலத்தை சமூக வலைத்தளங்களில் பெற்றவர் நடிகை ஷாலு சம்மு.

இந்நிலையில், வெளிநாட்டு சுற்றுலா பயணத்தின் போது நீச்சல் குளத்தில் அரைகுறை ஆடையுடன் குளிக்கும் வீடியோ ஒன்றை அண்மையில் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.



இதனை கண்டு பலரும் வழக்கம் போல விமர்சித்து தள்ள, 'எனக்கு என்னை பற்றிய எந்த ஒரு பதிவையும் வெளியிட உரிமை இருக்கிறது. பிடித்திருந்தால் பாருங்கள், பிடிக்கவில்லை என்றால் என் பக்கத்தை விட்டு வெளியேறுங்கள்' என தடாலடியாக போட்டு தாக்கி இருக்கிறார்.      
Disqus Comments
'