Thursday, 12 September 2019

'வேண்டாஞ்சாமி... தம்பி நமக்கே ஆப்பு அடிச்சிருவான்!' சிம்புவை கழட்டி விட்ட சீமான்


'என்னை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார்னா அது சிம்புதான். நானும் தம்பியும் சேர்ந்து 3 படம் பண்ண இருக்கோம். அதை பார்த்து அத்தனை பெரும் செத்துப்போயிருவான்' என நிகழ்ச்சி ஒன்றில் சீமான் பேசியது நினைவிருக்கலாம்.

அப்படி கூறிய சீமானே, தம்பியை வைத்து ஒரு படம் பண்ணா கூட நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டார் போலவோ என்னவோ...

திரைப்பட துறையில் சிம்பு செய்த சேட்டைகளால் பாதிக்கப்பட்டவர்கள், அவர் மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவிக்க, 'நான் திருந்தி விட்டேன்' என்பது போல இரண்டு படங்களில் ஒழுங்காக நடித்து கொடுத்தார் சிம்பு.

பின்னர் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக, மாநாடு பட கால்சீட் பிரச்சனையில் மீண்டும் கெட்டுப்போனது சிம்புவின் பெயர். இதனால் உஷாரான 3 படங்களுடன் காத்திருந்த சீமான், சைலண்டாக முதல் படத்துக்கு G.V. பிரகாஷை நாயகனாக்கி இருக்கிறார்.

கிரேட் எஸ்கேப் சீமான் அவர்களே...      
Disqus Comments
'