Thursday, 19 September 2019

ஆபாச படம் பார்கலைனா தூக்கம் வராது..! சீரழியும் பள்ளி மாணவிகள்... ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்


ஆபாச பட இணையதளங்களை இந்திய அரசு தடை செய்து விட்டாலும், பார்ப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் இவ்வகை படங்களை பார்க்கும் பெண்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளதாக கூறி அதிர வைக்கிறது சமீபத்திய கருத்து கணிப்பு ஒன்று.

மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று, அப்புகுதியில் உள்ள பள்ளி மாணவ மாணவியரிடையே பாலியல் குறித்த கருத்துக்கணிப்பை நடத்தியது. சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்ட இந்த கருத்துக்கணிப்பு பெற்றோர்களையும் சமூக ஆர்வலர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதன் படி, 16 முதல் 22 வயது உடையவர்களில் 33 சதவிகித மாணவர்களும், அவர்களுக்கு சற்றே குறைவாக, 24 சதவிகித மாணவிகளும் ஆபாச படங்கள் பார்ப்பதற்கு அடிமையாகி இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

இவர்கள் சராசரியாக வாரத்திற்கு 40 வீடியோக்கள் காண்பதையும்,  25 சதவிகித மாணவர்கள் ஆபாச படங்களில் காட்டப்படுவதை போன்றே உறவில் ஈடுபட விரும்புவதையும், '46 சதவிகித பேர் ஆபாச காணொளிகளை பார்க்கவில்லை என்றால் தூக்கம் வராது' என்கிற அளவுக்கு அடிமையாகி இருப்பதாகவும் இவ்வாய்வு கண்டறிந்துள்ளது.

மேலும் மற்றொரு கொடுமை என்னவென்றால், இவர்களுள் 10 சதவிகித மாணவிகள் இந்த வயதிலேயே உறவில் ஈடுபட்டு கருக்கலைப்பு வரை சென்றதையும் ஒப்புக்கொண்டுள்ளதுதான்.

இந்நிலை தொடர்ந்தால் இந்திய சமூக கண்டிப்பாக பல பாதிப்புகளை சந்திக்கும் என்ற எச்சரிக்கையும் விடுத்திருக்கிறது இப்படியொரு ஆய்வை நிகழ்த்திய நிறுவனம்.


Disqus Comments
'