Thursday, 12 September 2019

ராஜா ராணி 'செம்பா-கார்த்திக்' திடீர் ரகசிய திருமணம்... ரியல் ஜோடியான ரீல் ஜோடி


'ராஜா ராணி' டிவி தொடர் வழியாக மக்களின் மனம் கவர்ந்த ஜோடியாக வலம் வந்தவர்கள் சஞ்சீவ்-ஆல்யா திடீரெனெ ரகசிய திருமணம் செய்து கொண்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

திரையில் தங்கள் மனம் கவரும், ரீல் ஜோடிகளை ரியல் ஜோடியாக்கி பார்க்க ரசிகர்கள் அதிகம் விரும்புவர், அப்படி திருமணம் செய்து கொண்ட சினிமா பிரபலங்களும் ஏராளம்.

இவர்களின் வரிசையில் இப்பொழுது, ராஜா ராணி தொடரின் மூலம் மக்களின் மனம் கவர்ந்த சஞ்சீவ்-ஆல்யா மனசா ஜோடியும் திருமண பந்தத்தில் இணைந்திருக்கிறது.

ஆரம்பத்தில் நட்பு ரீதியாக பழக, இருவருக்குமிடையே புரிதல் ஏற்பட்டதால் காதலிக்க துவங்கி தனியார் நிகழ்ச்சி ஒன்றில் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தமும் செய்து கொண்டிருக்கின்றனர்.

இவர்களின் திருமண அறிவிப்பு தேதியை ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் நேற்று, அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் 'கடந்த ஜூன் மாதமே எனக்கும் ஆள்யாவுக்கும் திருமணம் முடிந்து விட்டது. சில காரணங்களால் அறிவிக்க முடியவில்லை' என பதிவிட்டிருக்கிறார்.

இந்த தகவல் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் இருந்தாலும், திருமண பந்தத்தில் இணைந்து ரியல் ஜோடியான இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.





Disqus Comments
'