Saturday, 14 September 2019

பிரபல இந்திய 'சாம்பார் பொடி'யில் கொடிய பாக்டீரியா...! தடை விதித்த அமெரிக்கா


இந்தியாவை சேர்ந்த பிரபல மாசாலா பொடிகள் விற்பனை செய்யும் நிறுவனத்தின் சாம்பார் பொடிக்கு அமெரிக்காவில் தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

மசாலா பிரியர்களாக இந்தியர்கள் பல்வேறு மசாலா பொருட்களை அறைத்து உணவு பொருட்கள் செய்வது வழக்கம். இதனை எளிதாக்கும் விதத்தில் ரெடிமேட் மசாலா பொருட்கள் இந்தியாவில் கிடைக்கின்றன.

இப்படி ரெடிமேட் மசாலா பொருட்கள் தயார் செய்யும்  நிறுவனம் எம்.டி.எச். மசாலா பொடிகளை இந்நிறுவனம் அமெரிக்காவிலும் விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் இதன் தரம் குறித்து, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஆராய்ந்து ஆய்வுகள் செய்தது. ஆய்வின் படி எம்.டி.எச் நிறுவன மசாலா பொருட்களில் தொற்று நோய்களை ஏற்படுத்து சால்மோனல்லா எனப்படும் பாக்டீரியா இருப்பது கண்டறியப்பது.

இந்த பாக்டீரியா, குழந்தைகள், பெரியவர்களை அதிகம் தாக்க வாய்ப்பு இருக்கும் நிலையில், அந்நிறுவன மசாலா பொடிகளுக்கு அமெரிக்க அரசு தடைவிதித்துள்ளது.      
Disqus Comments
'