Monday, 23 September 2019

காமெடி சகாப்தத்துக்கா இப்படியொரு நிலை..? வருத்தத்தில் ரசிகர்கள்


80,90 களில் காமெடியில் வெளுத்து வாங்கியது செந்தில் கவுண்டமணி காம்போ. இன்று வரை தமிழ் சினிமா வரலாற்றில் காமெடியில் தலை சிறந்து விளங்கிய ஜோடியாக இவர்கள் திகழ்ந்து வருகின்றனர்.

இப்படி பட்ட பெருமை மிக்க நடிகரான செந்தில் அவர்கள், சின்னத்திரை மூலமாக அடியெடுத்து வைக்க இருக்கிறார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் ராசாத்தி. இதில் ஒரு முக்கியமான வேடத்தில் செந்தில் நடிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது.

அதன் புகைப்படங்களும் தற்பொழுது வெளிவந்துள்ள நிலையில், காமெடி சகாப்தமா செந்தில் அவர்கள் சின்னத்திரை சீரியலில் நடிக்கும் அளவிற்கு சென்று விட்டாரே என வருத்தத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Disqus Comments
'