Thursday, 19 September 2019

இப்படியும் ஹிந்தி திணிக்கப்படுகிறதா..? மதுரை ரயில்வே தேர்வால் எழும்பிய சர்ச்சை..


மதுரை பிரிவு தென்னிந்திய ரயில்வே தேர்வில் பெறும்பாலான வட இந்தியர்கள் தேர்வுசெய்ப்பட்டு இருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மத்திய அரசு வேலைகளில் வட இந்தியர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதனை உறுதி செய்வது போலவே அமைந்தது மதுரை பகுதிக்கான ரயில்வே தேர்வு முடிவுகள்.

D பிரிவு முதல் நிலை பணிகளுக்கு நடைபெற்ற இந்த தேர்வில் சுமார் 520 பேர் தேர்வான நிலையில் அவர்களுள் பெரும்பாலானவர்கள் வட இந்தியாவை சேர்ந்தவர்கள்.

இது ஒருபுறம் இருக்க தேர்வு செய்யப்பட்ட பெரும்பாலான வட இந்தியர்களின் பெயர்கள், பொதுவாக 'மீனா' என்கிற இறுதி பெயரையும் சம்பந்தமில்லாமல் கொண்டிருந்தது இப்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 

இதன் புகைப்படங்கள் பிரபல நாளிதழ்களில் வெளியான நிலையில், வட இந்தியர்களின் ஆதிக்கம் தென்னிந்தியாவிலும் நிகழ, வேறு வழியின்றி தென்னிந்திய மக்களும் ஹிந்தியை கற்றுக்கொள்ள வைக்க அரசு பணிகளில் வட இந்தியர்களை மத்திய அரசு நியமிப்பதாகவும் பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Disqus Comments
'