Wednesday, 11 September 2019

தர்பார் பர்ஸ்ட் லுக்..! 'புலிகேசி' வடிவேலுவுடன், ரஜினியை ஒப்பிட்ட கிண்டல்...!


A.R. முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் தர்பார். நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பின் இத்திரைப்படத்தின் முதற்பார்வை போஸ்டர் இன்று வெளியானது. 

குறிப்பிட்ட புகைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஜிம் சென்று மெருகேற்றிய கட்டுடலுடன் மிகவும் இளமையாக காணப்பட்டார். இந்த லுக்கிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

என்றாலும் விமர்சகர்கள் சிலரோ, 'இது ரஜினியின் உண்மையான உடல் அல்ல கிராபிக்ஸ்' என்று நம்ப மறுக்க, சிலரோ '23ம் புலிகேசி படத்தில் வடிவேலுவின் தலை, பயில்வானின் உடலில் ஓவியத்தின் மூலம் எப்படி இணைந்ததோ, தர்பார் சூப்பர் ஸ்டாரின் தலையும் அவ்வாறே கட்டுடலுடன் கிராபிக்ஸ் வழியாக இணைந்துள்ளது' என கிண்டலாக விமர்சித்தும் வருகின்றனர்.


Disqus Comments
'