Monday, 23 September 2019

கை அசைவில் கோடி கோடியாய் கொட்டும் பணம்...! வைரல் சாமியாரின் அலப்பறைகள்


தமிழக மக்களின் மத நம்பிக்கையை தங்களுக்கு சாதமாக பல நூற்றாண்டுகளாவே போலி சாமியார் கும்பல்கள் பயன்படுத்தி கொண்டு வருகின்றனர்.

இப்படி சாமியாராக இருந்து கோடி கோடியாய் சம்பாரித்தவர்கள் தமிழகத்தில் ஏராளம், இந்நிலையில் அவர்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விடும் அளவிற்கு வீடியோ வடிவில் வைரல் ஆகி வருகிறார் சாமியார் ஒருவர்.

சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோ ஒன்றில், சாமியார் வேடத்தில் தோன்றிய நபர் ஒருவர் கை அசைக்க வைத்திருக்கும் எலுமிச்சை பழம் அந்தரத்தில் பறக்கிறது.

பின்னர் பூ மழை பொழிகிறது, தொடர்ந்து பூ மழை பண மழையாகமாறுகிறது. இப்படி கோடிக்கணக்கான பணம் அவர் மீது வந்து விழ, பின்னால் அவரது செல்போன் என்னும் காட்சி படுத்தப்பட்டு இருக்கிறது.

குறிப்பிட்ட வீடியோவை கண்டு, தங்களுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்கிற நோக்கில்சாமியார்  வீடியோ வெளியிட,  மக்களோ 'உஷாரா இருங்க கள்ள நோட்டு கேஸில் கைது செய்ய போலீஸ் வீடுதேடி வரலாம்' என அவரை கலாய்த்து வருகின்றனர்.

Disqus Comments
'