Sunday, 15 September 2019

இப்படியொரு கேவலமான தலைப்பா..? துணை முதல்வரையே வம்புக்கு இழுக்கும் திரைப்படம்...


சமூக வலைத்தளங்களை தெறிக்க விட்டு வருகிறது ஒரு ஆபாச, படத்தலைப்பு.

தற்பொழுதெல்லாம் திரைப்படம் நல்ல வசூல் கொடுக்க இரண்டே முறைகள் தான் பின்பற்றப்படுகிறது. ஒன்று மக்களை கவரும் படத்தை இயக்குவது, இரண்டு-சர்ச்சையான தலைப்பு, அரசியல் விமர்சனம் போன்றவற்றால் தங்கள் படத்துக்கு விளம்பரம் தேடுவது.

அதன் படி இரண்டாவது முறையை பின்பற்றும் திரைப்படங்கள் எக்கச்சக்கமாகி விட்டனர். அதன் வரிசையில் சமீபத்தில் திரைக்கு வந்த திரைப்படம், ஒங்கள போடணும் சார் (OPS).

 ஸ்ரீஜித் விஜயன் இயக்கத்தில், ஜித்தன் ரமேஷ், மனோபாலா, கல்லூரி வினோத் ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் 'ஒங்கள போடணும் சார்'. நானும் ரௌடிதான் திரைப்படத்தில் நயன்தாரா பேசிய சர்ச்சை வசனம் இத்திரைப்பட தலைப்பாகி இருக்கிறது.

குறிப்பிட்ட வார்த்தையே சர்சைக்குரியது எனும் நிலையில், கூடவே OPS என அதன் சுருக்கத்தையும் படக்குழுவினர் தலைப்புடன் இணைத்துள்ளனர். ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் OPS என்றால் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள்தான், இந்நிலையில் 'இத்தலைப்பு அதிமுகவினரை வம்புக்கு இழுத்து விளம்பரம் தேடும் முயற்சி' எனவும் விமர்சித்து வருகின்றனர் ரசிகர்கள். 



Disqus Comments
'