Friday, 6 September 2019

'4' பந்துகளில் '4' விக்கெட்..! நியூசிலாந்துக்கு தண்ணி காட்டிய மலிங்கா


நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையேயான 3 வது T20 போட்டி இன்று இலங்கையிலுள்ள பல்லேகேழே மைதானத்தில்நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை  அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. நியூசிலாந்து அணி பந்து வீச்சில் கலக்க 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து வெறும் 125 ரன்களை மட்டுமே இழந்தது.

126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற எளிய இலக்கோடு களம் இறங்கிய நியூசிலாந்து அணி முதல் இரு ஓவர்களில் 15 ரன்களை குவித்தது. பின்னர் மூன்றாவது ஓவரை வீச வந்த மலிங்காவின் பந்துவீச்சில், முன்றொ, ருத்தர் போர்ட், கிராண்ட் ஹோம்மே, ராஸ் டைலர் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற திக்குமுக்காடி போனது நியூசிலாந்து அணி.

இதன் மூலம், சர்வதேச T20 போட்டிகளில் இரண்டாவது முறையாக ஹாட்ரிக் வீழ்த்தி சாதனை படைத்தது இருக்கிறார் மலிங்கா. சற்று முன்பு வரை நியூசிலாந்து அணி, 8 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்களை குவித்து வெற்றிக்கு போராடி வருகிறது.  


Disqus Comments
'