Friday, 6 September 2019

இந்து மதத்தை கேவலமாக சித்தரிக்கிறதா நெட்ப்ளிக்ஸ்..? சர்ச்சை காட்சிகளால் பரபரப்பு


ஹிந்து மதத்தையும் இந்தியாவையும் இழிவு படுத்தும் விதமாக தொடர்ந்து வெபசீரிஸ்களை இயக்கி வரும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்தை தடை செய்யக்கோரி சமூக வலைத்தளங்களில் போர் கொடி தூக்கி வருகின்றனர் வட இந்திய சமூக வலைதளவாசிகள்.

இணையவழி தொடர்களுக்கு உலக அளவில் பெயர் பெற்ற நிறுவனம் நெட்ப்ளிக்ஸ், இதில் ஒளிபரப்பாகி வரும் சர்ச்சைக்குரிய தொடரான 'சாக்ரெட் கேம்ஸ்' இப்பொழுது மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது.

பிரபல பாலிவுட் நடிகர் ஸாயிப் அலிகான், சிக் மதத்தினர் புனிதமாக கருதி அணியும் இரும்பு காப்பினை கழட்டி எரியும் காட்சிகள் இடம் பெற்று இருந்தது.
 இது மட்டுமல்லாது மேலும் பல தொடர்களில் இந்துமதத்தை இழிவு படுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருக்கும் நிலையில், இத்தொடரின் இயக்குனர் மீதும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்தின் மீதும் இந்து மத அமைப்புகள் வழக்கு தொடர்ந்து இருக்கின்றன.
br />
Disqus Comments
'