Sunday, 8 September 2019

'கொழுக் மொழுக்'னு இருந்த நமீதாவா இது..? கவர்ச்சியான உடற்பயிற்சி புகைப்படங்களால் வாயை பிளக்கும் ரசிகர்கள்


திரையுலகில் கவர்ச்சியில் இவரை அடித்து கொள்ள ஆள் இல்லை என கூறும் அளவிற்கு, கவர்ச்சி பதுமையாக வலம் வந்தவர் நடிகை நமீதா. என்றாலும் தனது உணவு பழக்கங்களை கட்டுபடுத்த முடியாமல் உடல் எடை கூடி படவாய்ப்புகளை இழந்தார்.

பெரிதாக நம்பி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில், இருந்த பெயரும் கெட்டுப்போக, ஆள் என்ன செய்கிறார் என்று தெரியாத அளவிற்கு, திருமணம் செய்து கொண்டு காணாமல் போய் விட்டார்.

தற்பொழுது மீண்டும் படவாய்ப்புகளை பெரும்முனைப்போடு களம் கண்டிருக்கும் அவர், கடுமையான உடற்பயிற்சிகளுக்கு பின் சிக்கென்று பழைய நமீதாவாக மாரி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.

இவரது ஜிம் வொர்கவுட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில், மீண்டும் பழைய நமீதாவாக திரையில் வலம்வர ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.   


Disqus Comments
'