Saturday, 7 September 2019

சகல வசதிகளுடன் 'பள்ளி மாணவர்களுக்கு' கஞ்சா பார்ட்டி..! போலீசிடம் சிக்கிய தாய்-மகன்


பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்ததுடன், கஞ்சா அடிக்க வீட்டிற்குள்ளேயே வசதி ஏற்படுத்தி கொடுத்த தாய் மகன் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.

சென்னை நெற்குன்றம், அன்னம்மாள் நகரை சேர்ந்தவர்கள் ராஜேஸ்வரி மற்றும் அவரது மகன் பாலமுருகன். இவர்களது வீட்டிலிருந்து கஞ்சா நாற்றம் வருவதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த போலீசார், கஞ்சா நடித்துக்கொண்டிருந்த மாணவர்களை கண்டித்து அனுப்பிவிட்டு சப்ளை செய்த தாய், மகன் இருவரையும் கைது செய்தனர்.

இவர்களது வீட்டினுள்ளேயே மாணவர்களுக்கு வெளிநாட்டினர் அருந்துவது போல, வித விதமாக கஞ்சா அடிக்கும் வசதிகளை செய்து கொடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Disqus Comments
'