Tuesday, 10 September 2019

தன் வாயாலேயே கெடுமாம் தவளை.... இருந்த கொஞ்ச நஞ்ச பேரையும் கெடுத்துக்கொண்ட மதுமிதா


பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் தற்கொலை செய்ய முயன்ற காரணத்திற்காக வெளி ஏற்றப்பட்ட மதுமிதா, நடந்தவை பற்றி முதன் முறையாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் மனம் திறந்திருந்தார்.

விஜய் டிவியின் கொள்கைகளுக்கு உட்பட்டு இதுவரை நேர்காணல்களில் பேசாமல் இருந்து வந்த மதுமிதா, அவர்களின் முன்னிலையிலேயே நேற்று  பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

தான் வெளியேற்றப்பட்ட 55வது நாள் அன்று, தமிழகம் குறித்து அவர் கூறிய கவிதை, அதன் பின் நிகழ்ந்த அசம்பாவிதங்கள் என விளக்க, ஆரம்பத்தில் மதுமிதாவின் தரப்பில் நியாயம் இருப்பதாகவே தோன்றியது.

ஆனால் தொடர்ந்து பேசிய மதுமிதா, அபிராமி உள்ளாடையை போடாமல் சுற்றினார். 6 வது நாளிலேயே முகீனுடன் பாட்டில் குழந்தை பெற்றார். அதற்கு ஆதரவளித்த வனிதாவை, 'உன் குழந்தை பள்ளியில் சிறுவனுடன் பாட்டில் குழந்தை பெற்றால் கொஞ்சுவாயா'..? என்றது, ஷாக்சி அகர்வால் ஜட்டி போட்டு சுற்றினார்' என கீழ்த்தரமாக விமர்சித்தது பெரும்பாலான ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது.

இந்நிலையில் தற்பொழுது அவருக்கு ஆதரவு அளித்து பேசிய ரசிகர்கள் கூட, 'மதுமிதாவின் பேச்சு கீழ்த்தரமாக உள்ளது. இது முழுக்க முழுக்க பழிவாங்கும் நோக்கில் கொடுக்கப்பட்ட நேர்காணல்' என விமர்சித்து பேச துவங்கியுள்ளனர்.




Disqus Comments
'