Tuesday, 10 September 2019

சாவு வீட்டில் சிரித்தால் அவன் பைத்தியம்..! சாண்டியை போட்டு தாக்கிய மதுமிதா


நீண்ட நாட்களாக நீடித்து வந்த, மதுமிதா தற்கொலை முயற்சிக்கான மர்மங்கள் விஜய் டிவி முன்னிலையில் அவர் அளித்த நேர்காணல் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், தன்னை இந்த நிலைமைக்கு தள்ளிய போட்டியாளர்கள் அனைவரையும் மிகவும் கீழ்தரமாகவே விமர்சித்தார்.

அபிராமி உள்ளாடையை போடாமல் சுற்றினார், 6 வது நாளிலேயே முகீனுடன் பாட்டில் குழந்தை பெற்றார். அதற்கு ஆதரவளித்த வனிதாவை, 'உன் குழந்தை பள்ளியில் சிறுவனுடன் பாட்டில் குழந்தை பெற்றால் கொஞ்சுவாயா'..? என்றது, ஷாக்சி அகர்வால் ஜட்டி போட்டு சுற்றினார்' என கீழ்த்தரமாக விமர்சித்தது பெரும்பாலான ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது.

இந்நிலையில் அவர் நடன இயக்குனரான சாண்டியையும் விமர்சிக்க தவறவில்லை. அவரது முன்னாள் மனைவியான காஜல் பசுபதி, நேர்காணல் ஒன்றில், 'சாண்டி சாவு வீட்டுக்கு போனா கூட, சிரிக்க வைப்பான். அவன்ட போய் சண்டைபோட உனக்கு எப்படி மனசு வந்தது' என மதுமிதாவை பற்றி விமர்சித்திருந்தார்.


இதற்கு நேற்றைய நேர்காணலில் பதில் அளித்த மதுமிதா, 'குடும்பத்தில் ஒருவரை இழந்து, ஒட்டுமொத்த உறவும் கலங்கிக்கொண்டிருக்கும் வேளையில், சிரிப்பவன் நார்மலான மனிதனாக இருக்க முடியாது' என கூறி பதிலளித்து சாண்டி ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்.
Disqus Comments
'