Wednesday, 11 September 2019

ஊரையே என்ன காரி துப்ப வச்சிட்டியே...! லொஸ்லியாவை திட்டி தீர்த்த தந்தை


நடிகர் சேரன், சக பிக்பாஸ் போட்டியாளரான லொஸ்லியாவை தனது மகள் போலவே பாவித்து, அறிவுரை வழங்குவது ஆறுதல் கூறுவது என கண்ணும் கருத்துமாக கவனித்து கொண்டார்.

ஆனால் லொஸ்லியாவோ கவினுடன் எழுந்த காதல் காரணமாக சேரன் பேச்சை மதிக்காமல் அவரையே தூக்கி எறிந்தார். இந்நிலையில் சமீபத்தில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் லொஸ்லியாவின் நிஜ தந்தை கவினுடனான காதலை கண்டிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்று உள்ளது.

குடும்பத்தை பிரிந்து கடந்த பத்து வருடங்களாக லொஸ்லியாவின் தந்தை கனடாவில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஒருவர் பின் ஒருவராக நுழைந்து போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்பொழுது பிக்பாஸ் வீட்டினுள் சென்றதனது தந்தையை கண்டு ஆனந்தத்தில் கதறி அழுகிறார் லொஸ்லியா. என்றாலும் கவினுடனான காதல் சர்ச்சைகளினால் கோபத்தில் இருந்த அவரது தந்தையோ,

'உன்னை அப்படியா வளர்த்தேன். என்ன சொல்லி இங்கே உன்னை அனுப்பினேன். ஊரே என்னை பார்த்து காரி துப்புவதற்கா?' என திட்டி தீர்க்க லொஸ்லியாவோ அழுதபடி வாயடைத்து போய் நிற்கிறார்.  

Disqus Comments
'