Saturday, 14 September 2019

'பிக்பாஸ்' லொஸ்லியாவுக்கு காத்திருக்கும் மெகா ஹிட் வாய்ப்பு... ஒப்புக்கொள்வாரா லொஸ்லியா.?


பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலே தமிழக இளைஞர்களின் மனதை துடிப்பான செய்கைகள், கியூட்டான முக பாவனை, துள்ளல் நடனம் மூலம் கவர்ந்தவர் இலங்கையை சேர்ந்த லொஸ்லியா.

இவர் இப்படி கவர்ந்தது இளைஞர்களை மட்டும் அல்ல, பல திரைப்பட, சின்னத்திரை இயக்குனர்களையும் தான். இப்பொழுதே பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் லொஸ்லியாவின் கால்ஷீட்டை பெற அவர்கள் காத்துகொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் அவர்கள் வரிசையில், சின்னத்திரையில் மெகா ஹிட்டான ராஜா ராணி தொடர் சீரியல் இயக்குனரும் இணைந்து இருக்கிறார். ஆலியா மானசா, சஞ்சீவ் ஆகியோர் நடிப்பில் ராஜா ராணி எனும் வெற்றி தொடரை இயக்கியவர் பிரவீன்.



சமீபத்தில் இது குறித்து பேசிய அவர், ராஜா ராணி தொடரின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாகவும் அதில் பிக்பாஸ் லொஸ்லியாவை நடிக்க வைப்பதில் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

என்றாலும் சினிமா வாய்ப்புகளும் கொட்டி கிடக்கும் நிலையில் ராஜா ராணி போன்ற சின்னத்திரை சீரியலை லொஸ்லியா தேர்ந்தெடுப்பாரா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.  
Disqus Comments
'